இன்றைய ராசிபலன்கள் 24.10.2024

மேஷம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

ரிஷபம்:

தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குடும்பத்தினருடன் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்:

இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்:

கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்.. சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கன்னி:

எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் முடித்து அதிகாரிகளின் பாராட்டு களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமான வரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு மகான்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு:

அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் சோர்வில்லாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது,

கும்பம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்:

உற்சாகமான நாளாக அமையும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னை கள் ஏற்படக்கூடும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவல கத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.