சர்வதேச T20 கிரிக்கட் போட்டியொன்றில் அணியொன்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையை நேபாளம் அணியிடமிருந்து சிம்பாம்வே அணி தட்டிப் பறித்துக்கொண்டது.
இன்று கம்பியா அணிக்கு எதிரான போட்டியிலேயே குறித்த உலக சாதனையை சிம்பாம்வே அணி படைத்துள்ளது.
கம்பியா அணிக்கு எதிராக உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிக்கு ஆபிரிக்காவில் இருந்து தெரிவாகும் துணை பிராந்திய தகுதிகாண் போட்டித் தொடரிலேயே இந்த சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாம்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய, சிம்பாம்வே அணி 4 விக்கட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றிக்கொண்டது.
சிம்பாம்வே அணி சார்பாக ஷிகந்தர் ராசா 43 பந்துகளில் 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதில் 15 சிக்சர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.