ஜா – எல தண்டுகம பிரதேச கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு கால்வாய்களில் வீசப்படுகின்றது.
மேல், வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் உள்ள பல்வேறு கால்நடைப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் இந்த வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகாத பன்றிகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.