நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில் போதியளவு வசதிகள் இல்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து ஆராய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சில வகை தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான இரசாயனங்கள் உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார்