கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பகுதிகள் நீரில் மூழ்கின

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய 175.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அவிசாவளை – எல்ஸ்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

களனி கங்கையின் நாகலகம் தெரு மற்றும் ஹங்வெல்ல பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, களனிமுல்ல, அம்பத்தளை, கல்வான, மல்வானை ஆகிய நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கடுவெல பிரதேசத்தில் தாழ்நில பகுதிகள் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இடமாற்றப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

களனி கங்கையின் நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில், ஹங்வெல்ல நீர்மானியின் நீர்மட்டம் 8.8 மீற்றராக உயர்ந்துள்ளது.

இதனால் அதனைய அண்டிய பஹத்கம, கொடபரகொடெல்ல, சிவலீவத்த, ஜயவீரகொட, வலவ்வத்த, வனஹகொட, ஈரியகொல்ல உள்ளிட்ட பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு களு கங்கை பெருக்கெடுப்பால் மில்லகந்த பிரதேசத்திலும், கிங் கங்கை நீர் மட்டம் உயர்ந்தமையினால் பத்தேகம பகுதியிலும் சிறு வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

களுத்துறை பண்டாரகம பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியது.

புலத்சிங்கள மற்றும் பரகொட பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இவ்வருடம் 17ஆவது தடவையாக வெள்ளத்தினால் தமது பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குகுலே கங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினால் தான் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தார்.