11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான ஆசிரியர் கடந்த 2 ஆம் திகதி அன்று பாடசாலை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இதன்போது, தனது பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.இது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.