இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு ஜ்னாதிபதி அனுர , இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.