காதலிப்பதில் இந்த இராசியினரை யாராலும் மிஞ்சவே முடியாதாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் விசேட குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்களாம்.

குறிப்பாக இந்த ராசியினரை காதலில் விழ வைப்பது மிக மிக எளிமையான விடயமாக இருக்கும். அப்படி இலகுவாக காதல் வயப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அதனால் அவர்களுக்கு சிற்றின்பத்தின் மீதும் காதல் விடயங்களிலும் அலாதி இன்பம் இருக்கும்.

இந்த ராசியினர் காதல் விடயத்தில் மிகவும் உண்மையாகவும் துணைக்கு நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.

அவர்கள் உறவுகளின் மத்தியில் விசுவாசத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் அதிகம் விரும்பகின்றார்கள்.

இவர்களிடம் கொஞ்சம் அன்பாக பேசினாலே எளிடையாக காதல் வயப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அன்பு காட்டுவதும் பிறரால் நேசிக்கப்படுவதும் மிகவும் பிடிக்கும்.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இதனால் இவர்கள் காதல் வயப்படுவது அதிகமாக இருக்கும்.

இந்த ராசியினர் எப்போதும் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். சிறிய விடயங்களுக்கும் கடுமையாக சிந்தித்து மனதை குழப்பிக்கொள்ளும் குணம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

இவர்கள் மற்றவர்கள் மீது அதிக அன்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோல் இவர்கள் மீது யாரேனும் பாசம் வைத்துவிட்டால் அவர்களை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.

இவர்களை காதல் வசப்படுத்துவது மிகவும் எளிமையாக விடயமாகும். அவர்களுக்கு காதல் செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே அன்பு மற்றும் பச்சாதாபத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை எளிதில் கவரும் வகையில் வசீகரமான தோற்றத்தை கொண்ட இவர்கள் யார் அன்பு செலுத்தினாலும் அவர்ளின்பால் இலகுவாக ஈர்க்கப்படுவார்கள்.

இதனால் எளிதில் காதலில் விழும் ராசியாக துலாம் ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் அடிப்படையில் அன்புக்காக ஏங்குபவர்களாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.