நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை குறைக்க இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம், குடியிருப்புகள், வாகனங்கள், ஊழியர்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என பல்வேறு உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆண்டுதோறும் கணிசமான செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது.
அத்துடன்; தற்போதைய நிதித் திறனில் இந்த பெரிய செலவினத்தை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பிலான பரிந்துரைக்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.