பேருந்து கட்டணத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக, சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.

அதற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ஒரு லீற்றர் பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.