நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரை 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவைத் தவிர, இந்த சில வாரங்களில் கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்க தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறியுள்ளார்.