யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியொன்றில் அபிவிருத்தி ஊழியராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண், அயல் வீட்டில் வசிக்கும் 18 வயதான பாடசாலை மாணவனுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் விசேட சித்திகளைப் பெற்றவர் என்பதுடன் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையிலும் சிறப்பு சித்தி பெறுவார் என பாடசாலையால் எதிர்பார்க்கப்பட்டு கல்வி கற்று வந்தவர் என பாடசாலை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.
குறித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பெற்றோர் மணமகனை தேடி வந்த நிலையில் பெண்ணுக்கு திருமணம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைச்சுற்று மற்றும் வாந்தி காரணமாக அலுவலகத்திற்கு செல்லாது வீட்டில் நின்ற குறித்த பெண் மாணவனுடன் தலைமறைவாகியுள்ளதால் அவர் கர்ப்பமடைந்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகிக்கின்றார்கள்.
இதேவேளை, குறித்த மாணவன் சிறுவயது முதலே அரச பெண்ணின் வீட்டாருடன் நெருங்கிப் பழகி வந்தவர் என்பதுடன் குறித்த பெண் சிறுவயதில் அம் மாணவனை பாடசாலை மற்றும் ரியூசனுகளுக்கு கூட்டி செல்வது, கூட்டி வருவதுமாக இருந்துள்ளார் என்பது தெரியவருகின்றது.
த்லைமறைவான மாணவனின் தாயாரும் அரச ஊழியர் ஆவார். மாணவனின் தந்தை மின்சாரசபையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் எனவும் தெரியவருகின்றது.
இவர்கள் இருவரையும் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.