சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள சம்பள அதிகரிப்பு விவகாரம்!

அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சம்பள அதிகரிப்பை வழங்காத அரசாங்கம் தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்” என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர், பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எங்களிடம் 125 முறைப்பாடுகள் உள்ளன, ஆனால் 30 முறைப்பாடுகள் மட்டுமே தேர்தலகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இந்தத் தேர்தலின் தன்மையைக் கூட மாற்ற முடியும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, 5 அரச ஊழியர்களின் பணி இடைநிறுத்தப்பட்டனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்காமல், தபால் வாக்களிப்பு திகதி நெருங்கியபோது கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் தேர்தல் சட்டங்களும் மீறப்படுகின்றன.

பட்ஜெட்டில் வாகன இறக்குமதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அக்கறை கொண்டுள்ளோம். சமகி ஜன பலவேக கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த விஷயங்களில் ஒரு பிரிவினர் மட்டும் ஈடுபடவில்லை.

சில இடங்களில் பொலிஸார் சுதந்திரமாக இல்லை என்பதை நாம் அவதானித்துள்ளோம். மொத்தத்தில் கடுமையான பிரச்சனைகள் எதுவும் எழவில்லை இவ்வாறு பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.