வாகன விலைகளில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் (2025) முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (ali sabry) தெரிவித்துள்ளார்.

​​வாகன இறக்குமதி மீது அதிக வரி விதிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

பம்பலப்பிட்டியில் (Bambalapitiya) நேற்று (16.9.2024) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ​​அந்நிய செலாவணி கையிருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே கட்டண விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

150,000 முதல் 500,000 ரூபா வரை சம்பளம் பெறுவோருக்கு விதிக்கப்படும் வரியை 15 முதல் 23 சதவீதமாக குறைக்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கம் 17 வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன்களை செலுத்தவில்லை என்றும், உள்நாட்டு கடன்கள் அனைத்தும் செலுத்தப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகளில் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5.2 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முக்கிய வேட்பாளர்கள் இருவரும் வருமான வரியை குறைப்பதாக கூறியுள்ளதாகவும், இதனால் பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகள் கிடைக்கும் என்றும், ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் மூன்று இலட்சம் பேர் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.