வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா ஆரம்பம்!

பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும். தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தளி உலா வருவார்.

சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில் இடம்பெறும்.

இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு இடம்பெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5 மணிக்குவங்கக் கடல் நோக்கி புறப்படுவார்.

மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெறும். இறுதியாக அன்றைய தினம் மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.

தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறும்.