அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

இரண்டு தடவைகள் அமைச்சரவையினால் அங்கீகாரம் கிடைத்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) மற்றும் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவேற்றப்பட்டதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, சம்பள அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வருடத்திற்கு முன்னரே கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும், இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் அங்கீகாரத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) குழு சமர்பித்த பரிந்துரைகள் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.