கொழும்பு – மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட பணிப்பாளர் அவிஸ்கா விராஜனி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று வந்து அந்த இடத்தை ஆய்வு செய்ததுஇதன் போது மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதை கண்டு இடத்தின் உரிமையாளரையும்ம் கைது செய்திருந்தனர் .அந்த இடத்தில் 94 நிரப்பப்பட்ட 45 லீற்றர் கேன்கள், 73 500 மில்லி நிரப்பப்பட்ட போத்தல்கள் மற்றும் 240 வெற்று 45 லீற்றர் தேங்காய் எண்ணெய் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இதை அடுத்து நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.