சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியில், 25 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையில் இந்த பிரேரணை விவாதிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran Alles) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.விசா கட்டணம்
அத்தோடு, ஏழு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சுற்றுலா விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்ட முந்தைய கொள்கையை இந்த முயற்சி பின்பற்றுகின்றது.மேலும், 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்கு (Sri Lanka) பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.