சிறுநீரக நோய் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் உணரமுடியாது.
உடலில் இருக்கும் கிரியாட்டினின் அளவு குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்சினைகள் குறையும். எனவே இதற்காக இந்த நோய்க்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சிறுநீரகம்
இந்த கிட்னி நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் சிறுநீரகங்களில் ரத்த ஓட்டம் குறைந்து டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழ்கிறது.
சிலர் பயன்படுத்தும் தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.
இதை தவிர Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.பொதுவாக நமது சிறுநீரக பாதை சுத்தமாக இருக்க வேண்டும்.
இதில் கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் ஏற்பட்டால் இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும். இது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாகும் ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.
வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது
பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை இந்த நோய்காகன அறிகுறியாகும்.இதன்போது நீங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை உரிய முறையில் எடுத்துக்கொள்வது நன்மை தரும்.