கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை!

கனடாவின் டொரன்டோவில் என்றும் இல்லாத அளவு கோடை காலத்தில் மழை பெய்துள்ளது.

கிழக்கு கனடா பகுதியில் கூடுதல் அளவில் இந்த கோடை காலத்தில் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு கனடாவின் அனேகமான பகுதிகளில் வழமைக்கு மாறாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதி மற்றும் மொன்றியால் பகுதிகளில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் 128.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெய்துள்ளது.

மழை காரணமாக சுமார் 940 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.