KFC நிறுவனம் தொடர்பில் சர்ச்சை!

மட்டக்களப்பு கல்முனை KFC நிறுவனத்தில் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடுகளும், திருந்தும் வரை அங்கு செல்லாதீர்கள் என சமூக வலைத்தளத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று ஒரு கலியாட்ட நிகழ்வொன்றுக்காக (பார்ட்டிக்காக) மட்டக்களப்பு KFCஇற்கு அழைக்கப்பட்டிருந்தோம் அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு கதைவைத்திறந்தால் துர்நாற்றம் அடித்தது.

பார்க்கிங்க் ஏரியா முழுவதும் மலசலக் கழிவுநீர் மணத்துடன் அந்த இடம் முழுவதும் சிந்திகிடந்தது.

மூக்கைப்பொத்திக்கொண்டு உள்ளே சென்றால் மூன்றாம் தரக் கடைகளைவிட ஒரு சர்வதேச பெயருடனான KFC தரத்தில் கீழே காணப்பட்டது. அவர் தந்த பிளாஸ்டிக் பிளேட் கூட பிசு பிசு என்று கழுவாமல் காணப்பட்டது.

நான் RDHS / Batticaloa ஆக இருந்த போது பலமுறை KFC உட்பட உணவு ஸ்தாபனங்களின் சுகாதார நிலைமைகளை கட்டுக்குள் வைத்திருந்தோம் ஆனால் தற்போது அப்படி இல்லை .

இன்று KFC, புளியந்தீவுக்கு பொறுப்பான PHI க்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் அவர் பதிலளிக்கவில்லை.

நான் இருந்த காலத்தில் முறைப்பாடு செய்ய ஒரு whatsApp இலக்கத்தை அறிமுப்படுத்தியிருந்தேன் அதுகூட இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.