ரணிலுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்து வருகின்றனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.