இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கனடாவில் போராட்டம்!

பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது. இந்த போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது.

இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கனடாவில் டோரோன்டோவில் இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர் . இந்த போராட்டத்தில் இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என பல்வேறு மதத்தினரும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

பங்களாதேசில் உள்ள இந்துக்களை காப்பாற்ற இடைக்கால அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கோரி கனடா அரசு உயர் அதிகாரிகளிடம் போராட்டகாரர்கள் மனு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.