இலங்கையின் அரச சேவையின் சகல துறைகளிலும் வேதனத்தைத் திருத்துவதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அமைச்சரவை அங்கீகாரம்
இதன்படி, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அரச அதிகாரிகள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி உரிய தகவல்களை ஆராய்ந்து அறிக்கையைத் தயாரித்துள்ளது.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கும் அதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.