பிரித்தானியாவில் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

பிரித்தானியாவில்(UK) ஏற்பட்ட கலவரங்களுக்கிடையில் இலங்கையை சேர்ந்த பாலசூரியவிற்கு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

பிரித்தானிய கலவரம்
எனவே அங்கு வன்முறை வெடிக்க, அந்த இடத்திற்கு அருகில் இருந்த பாலசூரியவின் கடை புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இதனை தன் கையடக்க தொலைபேசியில், கடையின் சிசிரீவி கமெராவைக் கண்காணித்துள்ளதன் மூலம் தெரிந்துக்கொண்ட பாலசூரிய திகைப்படைந்துள்ளார்.

அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளதுடன் கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.

பாலசூரியவின் கடை
எனினும், அடுத்த நாள் அவர் கண்ட காட்சியே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அடுத்த நாள் காலை அருகிலிருந்த மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்து கடையை பழுது பார்த்துள்ளனர்.

.
பாலசூரியவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியவின் கடையை பழுது பார்ப்பதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.

கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார்.

நெகிழ்ச்சி சம்பவம்
அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் அலுமாரியையே கொண்டுவந்து கொடுத்துள்ளார். இதனால் சில தினங்களுக்குள் பாலசூரியவால் மீண்டும் தன் கடையை திறக்க முடிந்துள்ளது.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், “அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை எனவும், இது எனக்கு ஆச்சரியமளித்துள்ளது. இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை.

தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்து நின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும், எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது” என உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.