ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள்!

ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை (10) 5.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய பூகம்பம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் கழித்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் தலைநகருக்கு தெற்கே உள்ள கனகாவா மாகாணத்தில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ மற்றும் கனகாவா, சைதாமா, யமனாஷி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு அரசாங்கம் வலுவான பூகம்பம் எச்சரிக்கையை விடுத்த பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் மேற்கில் கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிச்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது