நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு வாக்காளரின் பிரசாரத்திற்கும் தேர்தல் ஆணையம் உச்சவரம்பைக் கொண்டு வரவுள்ளது
இதன் காரணமாக, இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆடம்பரமான செலவுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசார நிதிச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் முதலாவது தேர்தலாகும்.
இந்தநிலையில், 2024 ஆகஸ்ட் 15 அன்று வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட பின்னர், வேட்பாளர்கள் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பது அனைத்து போட்டியாளர்களுடனும் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய்களையே வேட்பாளர் ஒருவர் செலவிட முடியும் என்று தீர்மானிக்கப்பட்டது.என்றாலும் அந்த தேர்தல் நடத்தப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்த வரையில், வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை அதிகமாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.