பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா?

பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்வது அனைவருக்குமே பிடித்த விடயம் தான்.

குறிப்பாக பெண்களுக்கு முகத்தின் அழகை கூட்டுவது அவர்களின் அழங்காரம் அல்ல மாறாக அவர்களின் புண்ணகையே ஆகும். இதனால் தான் பெண்களுக்கு பொன் நகையை விடவும் புண்ணகையே அழகு என கூறிவைத்திருக்கின்றார்கள்.

புண்ணகை அழகாக இருக்க வேண்டும் என்றால் பற்கள் முத்து போல் வெண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதில் பற்களுகள் முக்கிய இடம் வகிக்கின்றது.

தற்காலத்தில் பற்களை உடனடியாக வெண்மையாக மாற்றும் ஏறாளமான உற்பத்தி பொருட்கள் சந்தைகளில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது. ஆனால் இவற்றில் ப்ளீச் பயன்படுத்தப்படுவதால் இதனை தொடர்ந்து உபயோகிப்பது அபாயகரமா பக்கவிளைவுகள் ஏற்டக்கூடும்.

எந்த விதமான பக்கவிளைவுகளும் இன்றி இயற்கையா முறையில் பற்களை வெண்மையாக்கும் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இது ஒரு பாரம்பரிய முறையாகும், வாய் சுகாதாரத்தை பாதுகாக்கவும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பற்களில் இருக்கும் கறைகளை அகற்றவும் இது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டுவரும் விடயமாகும்.

வாயில் எண்ணெய்யை ஊற்றி நன்கு கொப்பளித்து துப்பிவிட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் மூலம் வாயில் படிந்திருக்கும் பாக்டீறியாக்கள் நீங்கி வாய் சுகாதாரம் பேணப்படுகின்றது. மேலும் இதனை தொடர்ந்து செய்வதால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் படிப்படியாக குறைந்து பற்கள் வெண்மையாக மாறுவதை கண்கூடாக அவதானிக்கலாம்.

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுத்துவது சிறந்தது. இவற்றில் இயற்கை ஆன்டிபயோட்டிக் நிறைந்து காணப்படுகின்றது.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் இயற்கையானவே வெண்மையாக்கும் தன்மை காணப்படுகின்றது. அதன் காரணமாக பற்பசையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பேக்கிங் சோடா இருக்கின்றது. இது பற்களில் படிந்திருக்கும் கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்கி வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.

பற்களை விரைவில் வெண்மையாக்குவதற்கு ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து, பல் துலக்கலாம். வாரத்திற்கு 2 தொடக்கம் 3 முறைகள் இதனை செய்துவர பற்கள் முத்துபோல் ஜொலிக்கும்.பற்களை சுத்தப்படுத்த பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, பல் எனாமலை அரித்துவிடும் எனவே அவதாகமாக பயன்படுத்த வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு
ஹைட்ரஜன் பெராக்சைட்டில் இயற்கையாகவே வெண்மையக்கும் தன்மை காணப்படுகின்றது.மேலும் இது ஒரு இயற்கை ஆன்டிபயோட்டிக் என்பதால் பற்களை வெண்மையாக்கவும் வாய்சுகாதாரத்தை பாதுகாக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு சிறந்த தெரிவாகும்.

பற்களின் வெண்மையை பாதுகாக்க பேக்கிங் சோடா மற்றும் 1 சதவிகிதம் ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட பற்பசைறை பயன்படுத்துவது சிறந்தது.

அதனை தொடர்ந்து பாவித்துவர 6 வாரங்களில் 62 சதவீதம் பற்கள் வெண்மையாக மாறும் என ஆய்வு தகவவ் வெளியாகியுள்ளன.அதனை அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் ஈறுகளில் எரிச்சலை ஏற்படுத்தும் எனவே குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.