இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரின் சாதனை!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது.

இந்த போட்டிய் நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ஒட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே 3வது இடத்தை பிடித்துள்ளார்.