அமெரிக்காவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 100 மீ ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் வென்றார்.
அங்கு அவர் பதிவு செய்த நேரம் 9.784 வினாடிகள். இந்த போட்டியில் ஜமைக்காவின் கிஷன் தாம்சன் 9.789 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
நோவா லைல்ஸின் இந்த வெற்றி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வென்ற முதல் தங்கப் பதக்கம் ஆகும்.
இதற்கு முன்பு, 2004 ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காக ஜஸ்டின் காட்லின் தங்கப் பதக்கம் வென்ற நிலையில் தற்போது நோவா லைல்ஸ் தங்கப் ப்தக்கம் வென்றுள்ளார் .