காசாவில் போலியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள்

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசாவில் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் செய்திதொடர்பாளர் தெரிவிக்கையில், காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது.

தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைவதை உறுதிசெய்ய போர் நிறுத்தம் தேவை என கூறியுள்ளார்.

மேலும், போலியோ தொற்றுநோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்கையில், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.