பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றுகூடியது.
இதன்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவி
இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடந்த 24ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் வலுவான வழக்கை உறுதி செய்வதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.