கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்துக்கு தடை

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பேரூந்து ஒன்றும் கொள்கலன் பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல சந்திக்கு அருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.