குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும (aswesuma welfare benefits board) இரண்டாம் கட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 17 இலட்சம் குடும்பங்களின் தரவுகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாக நிதி அமைச்சகம் (Ministry of Finance) தெரிவித்துள்ளது.

இந்த மீள் கணக்கெடுப்பு கள உத்தியோகத்தர்களை நியமித்து கைத்தொலைபேசி விண்ணப்பத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களின் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி கணக்கெடுப்புகளை மேற்கொள்வதனால், ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 150 ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மேலும், கிராம அலுவலர்கள் கள அளவில் தரவு சேகரிப்பு பணியை கண்காணித்து, கண்காணிப்பு அலுவலர்களுக்கு விண்ணப்பம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 34 இலட்சம் குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை, அஸ்வெசும உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதி நிறைவடைய உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.

இதன் படி, இதுவரை 54,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.