அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்றையதினம் (24-07-2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
“அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒரேயடியாக தீர்க்க குழு நியமிக்கப்பட்டது.
இதேவேளை, அந்த குழுவின் ஆலோசனைப்படி, செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 7 லட்சம் பேர் இதனால் பலன் பெறுவார்கள்” என்றார்.