மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதத்தை எட்டியப் பின்னர் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய காலத்தைத் துல்லியமாக கூற முடியாது.
ஆனால், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலக்கை விரைவாக எட்ட முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.