பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் பலித்திருப்பது உலக நாடுகளை பீதியடைய செய்துள்ளது.

பல்கேரிய நாட்டை சேர்ந்த கண்பார்வையை சிறு வயதில் இழந்த பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் பலித்துள்ளதால் அவரது கணிப்புகளை உலக மக்கள் பெரிதும் நம்பி வருகின்றனர்.

பல்கேரிய ஜோதிடரான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு காலமானார். அவரது கணிப்புகள் தொடர்ந்து பலருக்கு எச்சரிக்கையாக உள்ளது.

குறிப்பாக அவரது கணிப்புகளில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என கணித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாகிச்சூடு 

பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும் அது அவரை காது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்படுவதாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் இந்த குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கவில்லை எனினும் சமீபத்திய கொலை முயற்சி அவரது வாழ்க்கை ஆபத்தில் இருப்பதைப் பற்றிய அவரது தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்த விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

 ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு ஆபத்து

அப்போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் டொனால்ட் ட்ரம்பை துப்பாக்கியால் சுட்டார். ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்த மேடையில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மேல் இருந்தபடி, ஏஆர்-15 ரக துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் முதல் சுற்றில் 3 குண்டுகள், 2வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதில் ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றதில் ட்ரம்ப், ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் பாபா வங்கா ஏற்கனவே கணித்தப்படி 2024 ஆம் ஆண்டில் ட்ரம்பின் காதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணிப்பின்படி ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவரது மற்ற கணிப்புகளும் பலித்துவிடுமோ என்ற அச்சம் உலக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே இரட்டை கோபுர தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, டயானா மரணம், பிரிக்ஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.

பலிக்காத  கணிப்புக்கள்

அதேவேளை 2016 இல் ஐரோப்பா அழிந்துவிடும் என்பதும், 2010 மற்றும் 2014 க்கு இடையில் ஒரு அணுசக்தி போர் போன்ற பிற கணிப்புகள் பலிக்கவில்லை என்பதால் உலக மக்களுக்கு சற்று நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.

எனினும் அவருடைய கணிப்புகளை சரிபார்க்க ஆவணங்கள் ஏதும் இல்லை என்றாலும் பாபா வங்காவின் கணிப்புகள் மீதான ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.