யாழில் இருந்து சென்ற அரச பேருந்து மீது தாக்குதல்!

  யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இடம்பெற்று இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து காப்பாளர் 

கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர் பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.