ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் விடுக்கும் அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (22) இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் (16-07-2024) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.