ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கும் மாணவர்கள்!

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விசுவமடு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் மாணவர்களின் சகாக்கள் ஊடாக தொடர்ச்சியாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.