மருத்துவர் அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என மருத்துவர் அருச்சுனாவுக்கு  சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு சமூக ஊடகங்களில் பிற வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி மருத்துவர் அருச்சுனா வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் நீதிம்ன்று உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் அருச்சுனா மீது வழக்கு தொடரலாம் 

அதேவேளை சமூக வலைத்தளங்களில் தான் முன்வைத்த குற்றசாட்டுக்களுக்கு மருத்துவர் அருச்சுனா ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினால் அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு நீதிமன்றம் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது  இன்றைய நீதிமன்ற வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிடவோ நேரலை வெளியிடவோ நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவ அதிகாரியாக கடமையேற்ற மருத்துவர் அருச்சுனா இராமநாதன் நியமனத்துக்கு எதிர்ப்பு வெளிய்ட்டு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மருத்துவர் அருச்சுனா வெளியிட்ட பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருந்தார்.

அதன்பின்னர் நேற்றையதினம் மீண்டும் அவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு வருகை தந்த நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

எனினும் அங்கிருந்து மருத்துவர் அருச்சுனா வெளியேறிய நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிகள் வழமைபோல் சுமுகமாக நடைபெற்று வருகின்றதாக , வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே சாவகச்சேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.