அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு!

ஜூலை 8 மற்றும 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த அரச ஊழியர்களினதும் சம்பள கோரிக்கைகளை நிரைவேற்றுவதற்கு பதிலாக பணிக்கு வந்த ஒருசிலருக்கு சம்பள உயர்வு அளிக்கும் முடிவைத் தடுக்க சட்டத்துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் செயலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரிவினருக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விசேட சம்பள அதிகரிப்பு
இந்த நிலையில், ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன் படி, 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1335 ரூபாவும், 1ஆம் தர ஆசிரியருக்கு 1630 ரூபாவும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்