கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
டிக்டாக் மற்றும் இஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் ஊடாக ஒருவரை மனதளவில் பாதிப்புக்குளாக்கி அவர்களை தவறான முடிவெடுக்க தூண்டுவதாக சமூக ஊடகங்களின் டவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இதனடிப்படையில், அண்மையில் கேரளாவை (Kerala) சேர்ந்த பெண்ணொருவரும் மற்றும் தற்போது மலேசியாவை (Malaysia) சேர்ந்த பெண்ணொருவரும் இணைய மிரட்டல் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண்
இந்தநிலையில், கேரளாவை சேர்ந்த 18 வயதுடைய ஆதித்யா நாயர் (Aditya Nair) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலாமாக இருந்து வந்த நிலையில் அங்கு ஒருவருடன் குறித்த பெண்ணுக்கு நட்பு ஆரம்பமாகியுள்ளது.
இதையடுத்து, குறித்த பெண்ணும் மற்றும் அந்த இளைஞரும் ஒன்றாக இணைந்து சமூக வலைத்தளங்களில் தமது காணொளிகளை பதிவிட்டு வந்துள்ளனர்.
சிறிது காலத்தில் குறித்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையில் விரிசல் ஏற்பட அந்த இளைஞரின் நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் குறித்த பெண்ணை இணைய மிரட்டல் ஊடாக மனவுளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.
இவ்வாறு ஜூன் பத்தாம் திகதி குறித்த பெண் தவறான முடிவெடுத்து காப்பாற்றப்பட்ட நிலையில் சிகிசிச்சை பலனின்றி ஜூன் 16 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.