எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, இதனை நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
கிடைத்துள்ள அழைப்பிதழ்
இதற்கான அழைப்பிதழ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், குறித்த பயணம் திட்டமிட்டு தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார்
தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விஜயம் இடம்பெறும் என வலியுறுத்திய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேர்தலுக்குப் பின்னர் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த அழைப்பிதழ் யாரிடம் இருந்து கிடைத்துள்ளது மற்றும் பயணத்தின் போது, சஜித், எந்த முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார் என்ற தகவல்களை அவர் வெளிப்படுத்தவில்லை.