ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 1.7 சதவீதமாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை, ரூபாயின் மதிப்பு சடுதியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலர்

இதேவேளை, மே மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.4 பில்லியன் டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 400 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும் அதிகளவான டொலரின் உள்வருகை காரணமாக டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.