பெற்றோர்களிடம் இலங்கை காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலத்தில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் என ஹட்டன் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தகவலை ஹட்டன் (Hatton) காவல்துறை அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குறித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆறு மாத கால சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தில் பல்வேறு போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு வழிபட வந்த183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றி வளைப்புகைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனவும் இவர்கள் போதைப்பொருளின் பக்கம் திரும்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் காவல்துறை அத்தியட்சகர் நிபுன தெஹிகம குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முடிந்த வரையில் சிறு வயதில் இருந்தே தங்களது பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாடு, தெய்வ வழிபாடு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

அதேபோல் இன்றைய சிறுவயதில் உள்ள, குறிப்பாக 16 வயது முதல் 28 வயது உடைய அனைவரும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல பிரஜையாக வாழ வேண்டும் என ஹட்டன் காவல்துறை அத்தியட்சகர் நிபுன தெஹிகம பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.