மாதுளம்பழம் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் இதை நாம் சாப்பிடும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயம் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
நமது இதயத்திற்கு நன்மை அளிப்பது முதல் ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருவது வரை மாதுளம் பழத்தில் பல்வேறு நன்மைகள் நிறைந்திருக்கிறது.
அதுவே மாதுளம் பழத்தை தவறான வழியில் சாப்பிடும் பொழுது அது நீங்கள் சாப்பிடும் ஒரு சில மருந்துகளோடு அது குறுக்கிடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் தவறியும் நாம் செய்யக்கூடா தவறை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
மாதுளம் பழத்தில் ப்ளாவானாய்டுகள் மற்றும் அந்தோசயானின்கள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் எக்கச்சக்கமாக நிறைந்துள்ளது. இது ஆக்ஸிடேட் அழுத்தத்தை குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தவிர்க்க உதவுகிறது. மேலும் இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கிறது.
ஆர்த்ரைட்டிஸ்
நமது உடலில் உண்டாகும் வீக்கத்தின் விளைவாக ஏற்படக்கூடிய ஒரு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனையான ஆர்த்ரைட்டிஸ் அறிகுறிகளிலிருந்து விடுபடுவதற்கு மாதுளம் பழம் உதவுவதாக ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைபேறு
குழந்தையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இந்த மாதுளம் பழம் மற்றும் அதில் உள்ள விதைகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது.
மாதுளம் பழத்தின் பக்க விளைவுகள்
மாதுளம் பழம் பொதுவாக எந்த ஒரு பக்க விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஒரு சில நபர்களுக்கு அதனை சாப்பிட்ட பிறகு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும் சில அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற அலர்ஜி விளைவுகளை அனுபவித்ததாக கூறுகிறார்கள். மாதுளம் பழத்தை நீங்கள் காலை அல்லது காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட தின்பண்டமாக சாப்பிடலாம். ஒரு நாளைக்கு அரை கிண்ணம் மாதுளை முத்துக்கள் போதுமானதாக இருக்கும்.