பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பனைமரத்தில் இருந்து பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை நார், பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள் கிடைக்கின்ற போதிலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அற்புத பொருள் ஐஸ் ஆப்பிள் என்று கூறப்படும் நுங்கில் இருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

கோடைக்காலம் என்றாலே நம் எல்லோரும் தேடுவது நுங்குதான் பலவேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் நுங்குகள் வெப்பமான காலநிலையில் நம் உடலை குளிரூட்டும் பண்புகளையும் கொண்டுள்ளன.

உடலுக்கு ஆற்றல் வழங்கும்
நம் உடலுக்கு தேவைப்படும் இயற்கையான ஆற்றலை நுங்கு அளிக்கிறது. இதற்கு நுங்கில் இருக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கன்டென்ட் காரணமாக இருக்கிறது. நுங்கில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் நம் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.

செரிமானத்திற்கு உதவும்
கோடைகாலத்தில் டிஹைட்ரேட் ஆவது பொதுவானது. இதனால் மலசிக்கல் மற்றும் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் நுங்குகளில் இருக்கும் டயட்டரி ஃபைபர் குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவும்
கோடைகாலத்தில் டிஹைட்ரேட் ஆவது பொதுவானது. இதனால் மலசிக்கல் மற்றும் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் நுங்குகளில் இருக்கும் டயட்டரி ஃபைபர் குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

கோடை காலத்தில் நுங்குகளை எடுத்து கொள்வது அதிகரித்து காணப்படும் உடல் வெப்பநிலையை கணிசமாக குறைக்க உதவுகிறது மற்றும் கடும் வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஹீட் ஸ்ட்ரோக் அல்லது வெப்பம் தொடர்பான பிற நோய்களுக்கு ஆளாக கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு நுங்குகள் நன்மை பயக்கும்.