தற்போது மார்பக புற்றுநோய் பெண்கள் மத்தியில் பரவி வரும் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஆண்களை விட அதிகமாக பெண்கள் தான் மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பெண்களுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
கணக்கெடுப்பின் படி, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றார்கள்.
மேலும், மார்பகப் புற்றுநோய் அதிகமாக உயரம் கொண்ட பெண்களுக்கு வருவதற்கான அபாயம் இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் உயரத்திற்கும், மார்பக புற்றுநோயிற்கும் என்ன தொடர்பு என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள்
1. பொதுவாக உணவுமுறை, வாழ்க்கை முறை, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், உடல் அமைப்பு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களாலும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருக்கின்றது.
2. NCBI -ல் செய்யப்பட்ட ஆய்வுகளின் வெளிபாடாக உயரமான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
3. மார்பக புற்றுநோயைத் துண்டும் காரணிகளில் உயரமும் ஒரு காரணியாக பார்க்கப்படுகின்றது. ஆனால் இது மட்டுமே காரணம் என்று கூற முடியாது.
4. உடல் உயரம் அதிகரிக்கும் பொழுது அவர்களின் ஹார்மோன் மாற்றங்களும் நிகழும். அத்துடன் இன்சுலின் போன்ற வளர்ச்சியும் அதிகமாகும். (IGF-1) இதுவும் ஒரு காரணியாக பார்க்கப்படுகின்றது.
5. திசுக்களின் வளர்ச்சியால் செல்கள் வளரும் இதன் காரணமாக கூட மார்பகப் புற்றுநோய் வரலாம்.