செவனகல(Sevanagala) சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் மிகவும் நூதனமான முறையில் நீண்ட காலமாக வளர்த்து வந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடவலவையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2-5 அடி உயரம் கொண்ட 9100 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 68 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் செவனகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
கஞ்சா செடிகள் அழிப்பு
குறித்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த கஞ்சா செடி நாற்றுகள் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செவனகல காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.